சுவிட்சர்லாந்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவர்: பொலிஸ் விசாரணை
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் தொடர்பில் இரு நாட்டு பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவர்
புதன்கிழமையன்று, St Gallen மாகாணத்திலுள்ள Sevelen என்னுமிடத்தில் Rhine நதியிலிருந்து 41 வயது நபர் ஒருவருடைய உயிரற்ற உடல் மீட்கப்பட்டது.

அவர் சுவிட்சர்லாந்தை ஒட்டியுள்ள Liechtenstein நாட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதே நேரத்தில், Liechtenstein நாட்டின் தலைநகரான Vaduzஇலுள்ள ஒரு வீட்டில் மூன்று பேருடைய உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்கள், Rhine நதியில் கண்டெடுக்கப்பட்டவரின் தந்தை, தாய் மற்றும் சகோதரி என பின்னர் தெரியவந்தது.
பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் சுவிஸ் மற்றும் Liechtenstein பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |