விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றின் ஊழியர்கள் நான்கு பேருக்கு மலேரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு கொசு விமானத்துக்குள் நுழைந்ததால் இந்த தொற்று பரவியுள்ளதாக கருதப்படும் நிலையில், மலேரியா தொற்று பரவல் ஏற்படலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ளது.
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு...
ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில், பயணிகளின் உடைமைகளைக் கையாளும் ஊழியர்கள் நான்கு பேருக்கு மலேரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு இந்த தொற்று பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எந்த விமானத்தில் இந்த கொசுப் பிரச்சினை ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
இந்நிலையில், விமானப்பணியாளர்கள் யாருக்காவது காய்ச்சல் வந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திக்குமாறும், ’விமான நிலைய மலேரியா’ குறித்து மருத்துவரிடம் திட்டவட்டமாக குறிப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

1969க்கும் 2024க்கும் இடையில், இத்தகைய விமான நிலைய மலேரியா தொற்றால் 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 9 பேர் ஜேர்மனியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |