டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் பலியான விவகாரம்: விபத்துக்கான காரணம் தெரியவந்தது

Canada Tesla
By Balamanuvelan Nov 13, 2024 06:15 AM GMT
Report

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரத்தில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் பலி

கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 24ஆம் கனடாவின் ரொரன்றோவில் வேகமாக சென்றுகொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, சாலையின் நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதியுள்ளது.

டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் பலியான விவகாரம்: விபத்துக்கான காரணம் தெரியவந்தது | 4 Indians Killed In Tesla Car Accident In Canada

Image: CTV

மோதிய வேகத்தில் கார் தீப்பிடிக்க, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த Rick Harper என்பவர், இரும்புக் கம்பி ஒன்றின் உதவியால், கார் ஜன்னல் கண்ணாடி ஒன்றை உடைத்து, காரிலிருந்த 20 வயதான ஒரு இளம்பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.

ஆனால், காருக்குள் கரும்புகை சூழ்ந்திருந்ததால், மேலும் நான்கு பேர் காருக்குள் சிக்கி, தப்பிக்க போராடிக்கொண்டிருந்ததை தான் உணரவில்லை என்று கூறியுள்ளார் ரிக்.

உயிர் தப்பிய அந்த இளம்பெண்ணின் நண்பர்களான Neelraj Gohil (25), அவரது சகோதரியான Ketaba Gohil (29), Jay Sisodiya என்பவர், மற்றும் Digvijay Patel ஆகிய நான்குபேரும் இந்த கோர விபத்தில் உடல் கருகி பலியாகிவிட்டார்கள்.

டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் பலியான விவகாரம்: விபத்துக்கான காரணம் தெரியவந்தது | 4 Indians Killed In Tesla Car Accident In Canada

Image: Handout

விபத்துக்கான காரணம் தெரியவந்தது

இந்நிலையில், கார் விபத்தில் உயிர் தப்பிய ஒரே இளம்பெண்ணைக் காப்பாற்றியவரான நிக், விபத்து குறித்து சில விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

காருக்குள் இருந்த அந்த இளம்பெண், கார் கதவைத் திறக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்ததை தான் கண்டதாக தெரிவிக்கும் ரிக், ஆகவே, தான் இரும்புக் கம்பி ஒன்றில் உதவியால் ஜன்னல் கண்ணாடி ஒன்றை உடைத்து அந்தப் பெண்ணை மீட்டதாக தெரிவிக்கிறார்.

ஒருவேளை, கார் மோதிய வேகத்தில் காரின் பேட்டரி செயலிழந்திருக்கக்கூடும். அதனால், கதவைத் திறக்கமுடியாமல் என தான் சந்தேகிப்பதாக தெரிவிக்கிறார் ரிக்.

டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் பலியான விவகாரம்: விபத்துக்கான காரணம் தெரியவந்தது | 4 Indians Killed In Tesla Car Accident In Canada

Image: Handout

விடயம் என்னவென்றால், வழக்கமான பல கார்களைப் போல் இல்லாமல், டெஸ்லா காரின் கதவுகள் எலக்ட்ரானிக் முறையில் செயல்படக்கூடியவையாகும்.

ஆனாலும், டெஸ்லா கார்கள் விபத்துக்குள்ளாகி, அதன் கதவுகள் செயல்படாமல் போகும் நிலையில், கதவைத் திறக்க ஒரு வழி உள்ளதாம்.

அதாவது, கார் கதவில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய பேனலைத் திறந்தால், அதில் ஒரு கேபிள் இருக்குமாம். அதைப் பிடித்து இழுத்தால், கார் கதவு திறந்துவிடும்.

ஆனால், இந்த பேனல் குறித்த விவரம் குறித்து அதிகம் விளம்பரம் செய்யப்படுவதில்லை.

டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் பலியான விவகாரம்: விபத்துக்கான காரணம் தெரியவந்தது | 4 Indians Killed In Tesla Car Accident In Canada

Image: CTV

இன்னொரு விடயம் என்னவென்றால், கார் விபத்துக்குள்ளாகும் நிலையில், இப்படி ஒரு பேனலை திறக்கவேண்டும், அதற்குள் இருக்கும் கேபிளைப் பிடித்து இழுக்கவேண்டும் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இருப்பதில்லை.

விபத்தில் சிக்கிய பதற்றத்தில் இருக்கும் யாரும், இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கமுடியாது என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US