ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் இந்த 4 வீரர்களுக்கு சிக்கல் - சோதனை மேல் சோதனை
ஐபிஎல் தொடரில் 4 முக்கிய வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மெகா ஏலத்தில் பல வீரர்களும் மற்ற அணிகளால் வாங்கப்பட்டதால் இந்த தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக மாறியுள்ள நிலையில் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணி வீரர்களும் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடை யே 4 அணிகளின் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களில் ஒருவரான ஆன்ரிச் நார்ட்ஜே இடுப்பு பகுதியில் உள்ள காயம் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மிகப்பெரிய தொகைக்கு ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்த தீபக் சஹார் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய அந்த அணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதேபோல் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பையின் முதல் போட்டியில் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.