கேப்டன் இல்லாமல் தடுமாறும் 4 ஐபிஎல் அணிகள் - குழப்பத்தில் ரசிகர்கள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 4 அணிகள் நிலையான கேப்டன் இல்லாமல் குழம்பி வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூரு நகரில் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் 1,214 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் 590 பேர் கொண்ட இறுதி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டிபோட்டு வாங்க காத்திருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்எஸ் தோனி, டெல்லி கேப்பிடல் அணிக்கு ரிஷப் பண்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல், அஹமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா ஆகியோர் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் இன்னும் கேப்டன்கள் இல்லாமல் தவிக்கிறது.அதேசமயம் இந்த தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்று கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வுபெற உள்ளதால் அந்த அணிக்கான வருங்கால கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.