ரயிலில் தீப்பிடித்துள்ளதாக பரவிய தகவல்: நான்கு பயணிகளுக்கு நேர்ந்த பயங்கரம்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் ரயில் ஒன்றில் தீப்பற்றியுள்ளதாக தகவல் பரவ, ரயிலிருந்து குதித்துள்ளார்கள் சில பயணிகள்.
பக்கத்து ரயில் பாதையில் ரயில் வருவதை அவர்கள் கவனிக்காமல்போனதால், அந்த ரயில் மோதி அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்கள்!
ரயிலில் தீப்பிடித்துள்ளதாக பரவிய தகவல்
நேற்று மாலை, மத்தியப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தான் நோக்கி புறப்பட்ட கஜுராஹோ உதய்ப்பூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் என்னும் ரயில், Morena என்னுமிடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்திருக்கிறது.

அப்போது, எஞ்சினுக்கு அருகிலுள்ள பெட்டி ஒன்றில் தீப்பொறியும் புகையும் வந்ததை சிலர் கவனித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து ரயிலில் தீப்பிடித்துவிட்டதாக செய்தி பரவத் துவங்கியுள்ளது.
உடனே அபாயச் சங்கிலியை சிலர் பிடித்து இழுக்க, ரயில் நின்றுள்ளது. ரயில் நின்றதும், மூன்று பெண்களும் ஒரு சிறுவனும் ரயிலிலிருந்து வெளியே குதித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அவர்கள் குதித்த அந்த ரயில் பாதையில் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.
வேகமாக வந்த அந்த ரயில் மோதியதில், அஃப்ரீன் (35), அஃப்ரீனின் மகனான ஆஷாத் (4), சகுந்தலா (60) மற்றும் வீர்மா தேவி (58) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்கள்.
இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |