பிரான்ஸில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 பேர் பலி! மக்களிடையே எழுந்த அச்சம்:சுகாதார அமைச்சர விளக்கம்
பிரான்சில் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சர், AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது, செயற்திறன் மிக்கது என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இதே போன்று பிரித்தானியாவிலும் ஏழு பேர் வரை உயிரிழந்தனர்.
இதனால் பொதுமக்களிடையே குறித்த AstraZeneca தடுப்பூசி தொடர்பாக அச்சம் எழுந்துள்ளது. இதனால் பல நிலையங்களுக்கு முன்பதிவு செய்த பலர் வார இறுதி நாட்களில் வரவில்லை.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Véran, தடுப்பூசி மிக பாதுகாப்பானது. விஞ்ஞான ஆய்வுகூட நிபுணர்களின் கருத்துப்படி 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதுடன், செயற்திறன் மிக்கதாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், AstraZeneca தடுப்பூசி தற்போது தனது பெயரை Vaxzevria என மாற்றிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.