அமெரிக்கா என அழைக்கப்படும் தங்க கழிப்பறையை திருடிய பலே கில்லாடிகள்: அதன் மதிப்பு?
பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தங்க கழிப்பறை ஒன்றை திருடர்கள் திருடிச் சென்றார்கள்.
2019ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தில், இரண்டு பேர் குற்றவாளிகள் என தற்போது நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
அமெரிக்கா என அழைக்கப்படும் தங்க கழிப்பறை
பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரிலுள்ளது Blenheim மாளிகை. இங்குதான் சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்துள்ளார்.
அந்த வீட்டில், ’அமெரிக்கா’ என பெயரிடப்பட்ட, முழுவதும் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அதன் மதிப்பு 4.75 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இலங்கை மதிப்பில், 1,82,38,84,575.00 ரூபாய். 2019ஆம் ஆண்டு, இரண்டு பேர் அந்த கழிப்பறையைத் திருடிச் சென்றார்கள்.
இரண்டு பேர் குற்றவாளிகள்
அந்த கழிப்பறையைத் திருட Michael Jones (39) என்பவர் உதவி செய்துள்ளார். Frederick Doe (36) என்பவர் அந்த கழிப்பறையை எடுத்துச் செல்ல உதவியுள்ளார்.
இந்த வழக்கில் தற்போது Jones மற்றும் Doe ஆகிய இருவரும் குற்றவாளிகள் என ஆக்ஸ்போர்டு கிரௌன் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
விடயம் என்னவென்றால், திருட்டுப்போன தங்கக் கழிப்பறை இதுவரை கிடைக்கவில்லை. திருடியவர்கள், உடனடியாக அதை உடைத்தோ உருக்கியோ விற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |