பிரித்தானியாவின் 'சிவப்பு பட்டியலில்' புதிதாக 4 நாடுகள் சேர்ப்பு!
பிரித்தானிய அரசு புதிதாக பாகிஸ்தான் உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகள் மற்றும் ஒரு ஆப்பிரிக்க நாடு ஆகிய நான்கு நாடுகளை 'சிவப்பு பட்டியலில்' சேர்த்துள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், கென்யா மற்றும் பிலிப்பைன்ஸை ஆகிய நாடுகளிடையே பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்துள்ளது.
முன்னதாக 36 நாடுகல் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக இந்த 4 நாடுகையும் சேர்த்துள்ளது.
இந்த நான்கு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து தடை வரும் ஏப்ரல் 9-ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் அமுல்படுத்தப்படுகிறது.
இந்த நாடுகளிலிருந்து அல்லது இந்த நாடுகளைக் கடந்து பயணித்து வரும் எந்த ஒரு சர்வதேச பயணிகளும் பிரித்தானியாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பிரித்தானிய மற்றும் ஐரிஷ் பாஸ்போர்ட்டுகளைக் கொண்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். அவர்களும், நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் 10 நாட்கள் சொந்த செலவில் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அந்த காலகட்டத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

