ஜேர்மானியர்களில் பத்தில் நான்கு பேருக்கு உருவாகியுள்ள கவலை
ஜேர்மானியர்களில் பத்தில் நான்கு பேருக்கு ஜேர்மனியின் அரசியல் எதிர்காலத்தைக் குறித்து கவலை இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
ஜேர்மானியர்களில் உருவாகியுள்ள கவலை
ஜேர்மனியில் அடுத்த மாதம் 23ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜேர்மன் அரசியல் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
YouGov என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில், ஜேர்மானியர்களில் 35 சதவிகிதம் பேர் தேர்தல் குறித்து கவலையில் உள்ளதாகவும், 15 சதவிகிதம் பேர் அரசியல் தலைவர்கள் மீது விரக்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆளும் ஓலாஃப் ஷோல்ஸ் அரசு மீது நம்பிக்கை மற்றும் திறமை குறித்த விடயங்களில் பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவிகிதம் பேர், அடுத்து ஜேர்மனியை ஆளும் கூட்டணியில் ஷோல்ஸ் கட்சி இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.
45 சதவிகிதம் பேர், ஷோல்ஸ் அரசுதான் ஜேர்மனியின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணம் என தெரிவித்துள்ளார்கள்.
11 சதவிகிதம் பேர்தான், ஷோல்ஸின் SPD கட்சிக்கு நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், முன்பு SPD கட்சிக்கு வாக்களித்தவர்கள் கூட, அக்கட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவர்களில் 55 சதவிகிதம் பேர் மட்டுமே கட்சி தங்கள் மீது அக்கறை காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |