பிரான்சில் மெட்ரோ ரயிலில் பயணிகளை கத்தியால் தாக்கிய வெளிநாட்டவர்., 4 பேர் காயம்
பிரான்ஸின் லியோன் நகரில் மெட்ரோ ரயிலில் 27 வயது மொராக்கோ நாட்டு பிரஜை ஒருவர் கத்தியால் மக்களை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல்தாரி, சட்டவிரோதமாக பிரான்சில் வசிப்பவர் என்றும், கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் கைது செய்யப்பட்டதாகவும், தாக்குதலின் போது தாக்குதல் நடத்தியவர் எந்த மத அல்லது அரசியல் கோஷங்களையும் கத்தவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்தப்பட்டவர்களில் இருவருக்கு வயிற்றில் காயம் என்றும் ஒருவருக்கு கையில் என்றும், அனால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொருவர் கடுமையாக காயமடைந்ததாகவும், அவர் Guinea நாட்டைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France Knife attack, France Lyon metro