கொண்டாட்டம் முடிந்து காரில் சென்ற மாணவர்கள்..நெடுஞ்சாலையில் நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம் பஞ்சாபில் காரில் பயணித்த 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்த வந்த மாணவர்கள் ஹொட்டல் ஒன்றில் நடந்த Partyயில் பங்கேற்றனர்.
அதன் பின்னர் அனைவரும் காரில் விடுதிக்கு திரும்பினர். அவர்கள் பயணித்த கார் பாட்சன் சாலையில் உள்ள பக்சிவாலா கிராமத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்தது.
கார் நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இதில் ஒரு மாணவி மற்றும் 3 மாணவர்கள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |