பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை: சமீபத்திய தகவல்
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பிலாத அரிய நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை
சமீபத்தில், பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

பட்டப்பகலில் நடந்த அந்தக் கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உருவாக்கிய நிலையில், அந்த கொள்ளை தொடர்பில் தற்போது மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முறையே 38 மற்றும் 39 வயதுடைய இரண்டு ஆண்களும், 31 மற்றும் 40 வயதுடைய இரண்டு பெண்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருமே பாரீஸைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு தம்பதியரும் அடக்கம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
37 வயதுடைய அந்த ஆண் மற்றும் அவரது மனைவிக்கு பிள்ளைகளும் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இதுவரை சிக்கவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |