கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 4 பதின்ம வயதினர்., தீவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா கடற்பரப்பில் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இரண்டு பெண்கள் உட்பட நான்கு பதின்ம வயது இளைஞர்கள் தீவு ஒன்றில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
விக்டோரியா மாகாணத்தின் மார்னிங்டன் தீபகற்பத்தில் உள்ள உள்ள Rosebud நகரத்தில் Point Nepean கடலோர சாலைக்கு சற்று அப்பால் கடற்கரையில், திங்கட்கிழமை காலை க்ளென் வேவர்லியைச் சேர்ந்த இரண்டு 18 வயதுடைய ஆண்கள், 18 வயது பெண் மற்றும் 19 வயது பெண் ஆகியோர் அலைச் சறுக்கு (inflatable paddleboards) செய்துகொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று காரணமாக அவர்கள் அலையில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Credit: Mart Stewart/News Corp Australia
அவர்கள் காணாமல் போனதாக தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ஏர் விங், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள், நீர் பொலிஸ் மற்றும் உள்ளூர் மீட்பு படகுகள் உட்பட அனைவரும் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, செவ்வாய்கிழமை காலை, ரோஸ்பட் நகரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்வான் தீவுக்கு அருகில் நான்கு இளைஞர்களும் உயிருடன் இருப்பதை விக்டோரியா காவல்துறை உறுதிப்படுத்தியது.
பலத்த கிழக்குக் காற்றில் சிக்கிய அவர்கள், பெல்லாரின் தீபகற்பத்தில் உள்ள ஸ்வான் தீவில், வழக்கமான காலை நடைப்பயணத்திற்கு வெளியே சென்ற உள்ளூர்வாசி ஒருவரால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
CBS Boston
அவர்கள் அனைவரும் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளனர் என்று ஆம்புலன்ஸ் விக்டோரியா தெரிவித்தது.
பலத்த காற்றை எதிர்த்துப் போராட முடியாமல் இரவு முழுவதும் அலைந்த அவர்கள் உயிர்தப்பிப்பியது ஒரு அதிசயம் என கூறப்படுகிது.