கல்லீரலை பாதுகாக்க உதவும் 4 விடயங்கள்- மருத்துவர் கூறும் விளக்கம்
மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரலே ஆகும்.
கல்லீரல், உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருகின்றன.
சில வாழ்க்கைமுறை மாற்றங்களால் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், கல்லீரலை பாதுகாக்க உதவும் 4 விடயங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
1. சைக்கிள் ஓட்டுதல் , நீச்சல் பயிற்சி, வேகமாக நடைப்பயிற்சி, ஓடுதல் போன்றவை அன்றாடம் செய்யவேண்டும். ஜிம்மிற்கு செல்பவராக இருந்தால் அங்கு உடற்பயிற்சிகளை செய்யலாம்.
2. அன்றாடம் குடிக்கும் டீ, காபியில் உள்ள பாலிபினால் சத்துக்கள் கல்லீரலை பாதுகாக்க உதவுகின்றன. ஒரு நாளைக்கு 2 முறை காபி குடிக்கலாம். இந்த சத்துக்கள் பல்வேறு பழங்களிலும் உள்ளது.
3. தினமும் நன்றாக தூங்கச்செய்வதால் இது கல்லீரலை பாதுகாக்குகிறது. குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது ஒரு நாளைக்கு நன்றாக தூங்க வேண்டும்.
4. உங்கள் பரம்பரையில் யாரேனும் ஒருத்தருக்கு கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ளது. அதற்காக முன்கூட்டியே சில பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |