நிலவு போன்ற ஜொலிக்கும் முகத்தை பெற இந்த 4 ஜூஸ் போதும்: கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க தான் அனைவரும் விரும்புவோம்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
முகத்தை பொலிவாக்க விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள சில ஜூஸ் வகைகள் குடிக்கலாம்.
அந்தவகையில், முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும் 4 ஜூஸ் வகைகளை பற்றி பார்க்கலாம்.
வெள்ளரி ஜூஸ்
சருமம் நீரேற்றத்துடன் இருந்தால் மட்டுமே முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும். இதனால் அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த வெள்ளரியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறையாவது வெள்ளரி ஜூஸை குடித்து வரலாம்.
இதில் உள்ள வைட்டமின்கள், தாதுகக்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் சருமத்தை புத்துயிர் பெற்று சருமம் வறண்டு விடுவதைத் தடுத்து கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
தக்காளி ஜூஸ்
முகத்தைப் பளபளப்புடன் வைத்துக்கொள்ள தாராளமாக தக்காளி ஜூஸ் குடித்து வரலாம்.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
மேலும் தோல் எரிச்சலைக் குணப்படுத்துவதோடு சருமத்தில் பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
கேரட் ஜூஸ்
சருமம் பளபளப்புடனும் ஆரோக்கியமாக இருக்க கேரட் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்பொழுதும் இளமையுடனும், பொலிவுடனும் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
கீரை ஜூஸ்
ஜூஸ் சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க கீரை ஜூஸை உங்களது உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு,பல சரும பிரச்சனைகளைத் தீர்வாக அமைகிறது.
மேலும், இவற்றுடன் பீட்ரூட் ஜூஸ், செலரி ஜூஸ் போன்ற ஊட்டச்சத்துள்ள காய்கறிகளால் செய்யப்படும் ஜுஸ்களையும் குடித்து வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |