கூந்தலுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 4 ஜூஸ்: தினமும் ஒரு டம்ளர் குடிங்கள்
முடி உதிர்வதற்கு, கால சூழ்நிலை மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு தான் முக்கிய காரணங்களாகும்.
சில காய்கறி ஜூஸ்களை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.
முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 ஜூஸ்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காணலாம்.
கேரட் ஜூஸ்
கேரட் வைட்டமின் ஏ உள்ளிட்ட பலவகை ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும் இதிலுள்ள கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை தலைமுடியின் வளர்ச்சிக்குத் துணைபுரியும்.
தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காயில் வைட்டமின் சி உள்ளிட்ட பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.மேலும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளை அதிகமாகக் உள்ளன.
வெள்ளரிக்காயை ஜூஸ் தினசரி எடுத்துக்கொள்வதன் மூலம் தலைமுடியின் வேர்க்கால்கள் உறுதியாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
ஸ்பின்னாச் ஜூஸ்
ஸ்பின்னாச்சில் வைட்டமின்கள், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் உள்ளன.
மேலும் இதில் உள்ள ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து இவை இரண்டுமே தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸ் முடி உதிர்வதை குறைத்து, முடி வளரவும் உதவுகிறது. இது வறண்ட உச்சந்தலைக்கு ஊட்டச்சத்தினை அளித்து பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது.
பீட்ரூட் ஜூஸில் உள்ள கரோட்டினாய்டு உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |