சாலையோரம் நின்றிருந்த 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! இளைஞர் கைது
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இளைஞர் ஓட்டிய கார் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சாலையோரம் நின்ற சிறுவன்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடாலா பகுதியில் ஆயுஷ் லக்ஷ்மண் என்ற 4 வயது சிறுவன் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சிறுவன் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் ஆயுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் பறிமுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரை இயக்கிய சாரதி சந்தீப் கோலே (19) என்ற இளைஞரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுவனின் தந்தை கூலி வேலை பார்த்துக்கொண்டு, சாலையோரம் வசித்து வந்தது தெரிய வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |