பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் மீது மோதிய பேருந்து: கோரிக்கை முன்வைத்த பொலிஸார்!
பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
4 வயது சிறுவன் உயிரிழப்பு
பிரித்தானியாவில் கென்ட் பகுதியில் மருத்துவமனைக்கு அருகில் நடந்த சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மார்கேட்(Margate) பகுதியில் ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு வெளியே வெள்ளை நிறப் பேருந்து ஒன்று நேற்று மாலை 4 மணி சிறுவனை மோதியுள்ளது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
சிறுவன் மருத்துவமனையை விட்டு தனியாக நடந்து வெளியே வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வழங்கிய தகவலில், A&E துறையில் நுழைவு வாயிலுக்கு அருகில் வெள்ளை பேருந்து ஒன்று இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்வதாக கென்ட் காவல்துறை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |