கும்பத்தில் உதித்த புதன்.., கோடிகளில் புரளப்போம் 4 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் பிப்ரவரி 10ஆம் தேதி புதன் கும்ப ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் புதன் தற்போது இருமடங்கு பலத்துடன் உள்ளார்.
மேலும், புதன் கும்ப ராசியில் உதயமாகும் போது, சுக்கிரனுடன் சேர்ந்து ஏற்கனவே லட்சுமி நாராயண ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.
அந்தவகையில், புதனின் உதயத்தால் குறிப்பிட்ட 4 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- தொழிலில் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
- வேலையில் நல்ல வெற்றியை அடைவார்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- தொழிலதிபர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மிதுனம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- அரசியலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.

சிம்மம்
- சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
- நிதி பிரச்சனைகள் குறையும்.
- சிறிய முதலீடுகளும் நல்ல பலனைத் தரும்.
- வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பெரிய முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
- நிதி தொடர்பான முடிவுகள் நீண்ட கால நன்மைகளை வழங்கும்.

கும்பம்
- வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- வருமானம் அதிகரிக்கும்.
- வங்கி தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- கடன் பிரச்சனைகள் தீரும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- காதல் உறவுகள் வலுவடையும்.
- குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சந்தித்த பிரச்சனைகள் தீரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |