மக நட்சத்திரத்தில் கேது.., கவனமாக இருக்கவேண்டிய 4 ராசிகள்
நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் கேது மார்ச் 29ஆம் தேதி தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.
அந்தவகையில், தீய கிரகமாக கருதப்படும் கேது மகம் நட்சத்திரத்திற்கு சென்றதால் குறிப்பிட்ட 4 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
- ஆரோக்கிய விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- பண விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- திடீரென்று செலவுகள் அதிகரிக்கும்.
- பல வேலைகள் முடிக்க முடியாமல் சீர்குலையும்.
- பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
- மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
- அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
- சவாலான காலமாக இருக்கும்.
- வேலையில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.
- பண விடயத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
- புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- தேவையில்லாத செலவுகளையும் தவிர்க்க வேண்டும்.
- குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும்.
- மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

தனுசு
- எதிர்பாராத பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- முக்கியமாக பண இழப்புகள் ஏற்படும்.
- தேவையற்ற செவுகளை அதிகம் செய்ய நேரிடும்.
- தடைகளை சந்திக்க நேரிடும்.
- பயணங்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
- குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
- ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்ய வேண்டும்.

மீனம்
- நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
- முதலீடுகளால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
- எப்போதும் மன குழப்பத்துடன் இருப்பீர்கள்.
- முடிவெடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள்.
- உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.
- பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |