40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட கோவில்- இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
40,000 Kg of Ghee Used to Build a Temple - இந்தியாவில் உள்ள ஒரு கோவிலை தண்ணீருக்கு பதிலாக 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
40,000 கிலோ நெய்
ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள பண்டசார் சமணக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சுமார் 550 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், சமண மதத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவில் தண்ணீருக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, கோவில் கட்டுமானத்தில் சுமார் 40,000 கிலோ தூய நெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பண்டசார் சமணக் கோவிலின் கட்டுமானப் பணிகள் கடந்த 1468ஆம் ஆண்டு தொடங்கியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பண்டசா ஓஸ்வால் என்ற பணக்கார சமண வணிகர் இந்தக் கோவிலைக் கட்டத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
கோவிலின் கட்டடக்கலை
சுமார் 86 ஆண்டுகளுக்குப் பிறகு, 1554ஆம் ஆண்டில் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.
பண்டசார் சமணக் கோவில் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கோவில் ராஜஸ்தானின் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்துகிறது.
கோவிலின் சுவர்களில் அழகிய சுவரோவியங்கள் காணப்படுகின்றன. மேற்கூரைகளில் தங்கத் தகடு வேலைப்பாடுகளும் உள்ளன.
மேலும், கண்ணாடி வேலைப்பாடுகளும், 24 சமணத் தீர்த்தங்கரர்களைச் சித்தரிக்கும் சிற்பங்களும் இக்கோவிலில் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |