சுவிஸில் கோர சம்பவம்! 40 பேர் உயிரிழப்பு.. என்ன நடந்தது?
சுவிட்சர்லாந்தின் வாலெஸ் மாகாணத்தில் உள்ள பனிச்சறுக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
ஆடம்பர பனிச்சறுக்கு விடுதி
தென்மேற்கு சுவிட்சர்லாந்து கிரான்ஸ் மொன்டானாயில் ஆடம்பர பனிச்சறுக்கு விடுதி உள்ளது. இது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு பனிச்சறுக்கு விடுதி ஆகும்.

இங்கு அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கானவர்களில் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுவிஸ் காவல்துறை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் உள்ள ஒரு ஆடம்பர பனிச்சறுக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் கெய்டன் லாத்தியோன் கூறுகையில், "கிரான்ஸ்-மொன்டானா என்ற ஆல்ப்ஸ் பனிச்சறுக்கு நகரத்தில் உள்ள 'Le Constellation' என்ற பாரில் அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். மேலும் பலர் காயமடைந்திருப்பதையும் பலர் உயிரிழந்திருப்பதையும் நாங்கள் காண்கிறோம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |