சுவிட்சர்லாந்தில் வாழும் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் வாழும் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் சுமார் 40 சதவிகிதம்பேர்!
சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் ஒன்று, 2020 இறுதி நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
2020 இறுதி நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் வாழும் சுமார் 2.7 மில்லியன் பேர், அதாவது நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களில் 38 சதவிகிதம் பேர், 15 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் என்கிறது சுவிஸ் புள்ளிவிவரங்கள் அலுவலகம்.
2019ஐ ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 0.3 சதவிகிதம் அதிகமாகும்.
வெளிநாட்டுப் பின்னணி கொண்டவர்களில் 80 சதவிகிதம் பேர் (2.2 மில்லியன் பேர்) வெளிநாடுகளில் பிறந்தவர்கள், மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள் ஆவர்.
ஆனால், ஒரு வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இந்த புலம்பெயர்ந்தோரில் பலர் வேலையில்லாமல் தவிப்பதாகவும், வேலை கிடைத்தவர்கள் பலர், தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில் நீங்கள் வாசித்திருக்கலாம்.