40 வயது, 7வது முயற்சி, 1000வது இடம்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள பெண்
40 வயதில் தனது 7வது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்ணை பற்றிய தகவலை பார்க்கலாம்.
யார் அவர்?
கேரளாவைச் சேர்ந்த நிசா உன்னிராஜன், தனது 40 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஏராளமான தடைகளை எதிர்கொண்ட போதிலும், நிசா 2024 இல் தனது ஏழாவது முயற்சியிலேயே 1,000வது இடத்தைப் பிடித்தார். இவர் தனது 35 வயதில் தனது சிவில் சர்வீஸ் பயணத்தைத் தொடங்கினார்.
தனது மகள்கள் நந்தனா (11) மற்றும் தன்வி (7) மற்றும் அவரது கணவர் அருண் மற்றும் அவரது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பெற்றோரின் ஆதரவுடன் தனது வீட்டுப் பொறுப்புகளை சமநிலைப்படுத்தினார்.
UPSC தேர்வில் 6 முறை தேர்ச்சி பெற முடியாத நிசாவுக்கு, காது கேளாமை பிரச்சனையும் உள்ளது. இருப்பினும், பல தோல்விகளைச் சந்தித்த போதிலும் அவர் கைவிடவில்லை.
ஒவ்வொரு பின்னடைவிலிருந்தும் கற்றுக்கொண்டார். இதையடுத்து, தனது 7வது முயற்சியிலேயே அகில இந்திய ரேங்க் (AIR) 1000 உடன் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |