பிரித்தானிய கடற்கரையில் சோகம்: நீரில் மூழ்கி 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு
40 years old died in Devon coast: பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த நீச்சல் விபத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய கடற்கரையில் சோகம்
பிரித்தானியாவின் டெவோன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தில் சர்ரேயைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை பிளாக்நூல் சான்ட்ஸ் கடற்கரையில் ஒருவர் ஆபத்தில் சிக்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விரைவாக செயல்பட்ட கடற்கரை காவல்படையினர் நீரில் மூழ்கிய நபரை கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு தேவையான அனைத்து முதலுதவி சிகிச்சைகளையும் அளித்தனர்.

இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறை அதிகாரிகள், இது ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெப்பமான காலத்தில் திறந்தவெளி நீர்நிலைகளில் ஆபத்து அதிகரிப்பதால், கடற்கரை, ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற இடங்களில் நீந்தும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |