டைனோசர்களை விரும்பும் சிறுவன்... தோட்டத்தில் கண்டுபிடித்த 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான பொருள்
இங்கிலாந்தில் வாழும் ஒரு சிறுவனுக்கு டைனோசர்கள் என்றால் அப்படி ஒரு பைத்தியம்...
எப்போதும் கற்கால பொருட்களை தேடிக்கொண்டிருக்கும் Siddak Singh Jhamat (6)க்கு, அவனது பாட்டி அதற்கு உதவும் வகையில் கிட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதை வைத்து எப்போதும் தன் தோட்டத்தில் எதையாவது தோண்டி தேடிக்கொண்டிருப்பான் Jhamat.
அப்படித்தான் ஒரு நாள் தோண்டிக்கொண்டிருக்கும்போது தனக்கு கிடைத்த ஒரு பொருளை தன் பெற்றோரான Vish Singh (42)மற்றும் Sangeeta Tutt (40)இடம் காட்டியிருக்கிறான் Jhamat.
அவர்களும், அது வித்தியாசமாக இருப்பதைக் கண்டு, பேஸ்புக்கில் இதுபோன்ற புராதன பொருட்களை தேடும் குழுக்கள் நிறைய இருப்பதால், அவர்கள் பார்வைக்கு அதைக் கொண்டு சென்றுள்ளனர்.
Jhamat ஆசைப்பட்டதுபோலவே, அந்த பொருள் ஒரு பழங்கால பொருட்கள் என அவர்களும் கூறிவிட, வானத்துக்கும் பூமிக்குமாக சந்தோஷத்தில் குதித்துக்கொண்டிருக்கிறான்.
அவன் கண்டுபிடித்துள்ளது சாதாரண ஒரு பொருள் அல்ல, அது 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒருவகைப் பவளப்பாறை (horn coral) ஆகும்.
488 மில்லியன் முதல் 251 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என கருதப்படும் அந்த horn coral, இப்போது உலகத்தில் கிடையாது, மறைந்துபோய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


