ரூ.40,000 கோடி சொத்துகள் வேண்டாம்.. துறவியான மலேசிய கோடீஸ்வர தமிழரின் மகன்
சொகுசான வாழ்க்கை, ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் பூண்டுள்ள கோடீஸ்வரரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
பணக்காரரும், மலேசிய தமிழருமான ஆனந்த கிருஷ்ணனின் வெண் அஜான் ஸ்ரீபன்யோ (Ven Ajahn Siripanyo) தான் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள், ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் பூண்டுள்ளார்.
ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.40,000 கோடியாகும். இவரது சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமே எண்ணெய் தொழில் தான். இவர் முதலில் எண்ணெய் வர்த்தகராவார். இவரது முயற்சியாக எண்ணெய் வர்த்தக சலுகைகளை கையாண்ட நிறுவனம் Exoil Trading ஆகும். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது.
மேலும், தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ, சாட்டிலைட் ஆபரேட்டர் MEASAT, பிராட்பேண்ட் வழங்குநரான Maxis ஆகியவை அவரது சிறந்த வணிக நிறுவனங்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ஸ்பான்சர் செய்தவர் ஆவார்.
துறவியான பணக்காரரின் மகன்
ஆனந்த கிருஷ்ணன் சாம்ராஜ்ஜியத்திற்கு வாரிசாக இருக்க வேண்டிய அவரது மகன் Ven Ajahn Siripanyo வேறு இடத்திற்கு சென்று விட்டார். ஆனால், இவரது தந்தையின் தொழில் டெலிகாம், மீடியா, ஆயில் அண்டு கேஸ், ரியல் எஸ்டேட், சாட்டிலைட்டுகள் என விரிந்து உள்ளது.
ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பால் மலேசியாவில் மிகப் பெரிய பணக்காரர் ஆகினார். ஆனால், இவர் புத்த மதத்தை தழுவியுள்ளார்.
இவரது மகன், 18 வயதிலேயே பௌத்த துறவியாக மாறிவிட்டார். இது வெளியில் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும், அவர் வேடிக்கையாக இந்த துறவறத்தை ஏற்றதாகக் கூறப்படுகிறது.
தற்காலிகமாக தற்போது துறவறம் பூண்டாலும் பின்னால் அதையே நிரந்தரமாக அவர் பின்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது, தாய்லாந்தின் தாவோ டம் மடாலயத்தின் மடாதிபதியாக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |