ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்திலிருந்து சுமார் 40,000 புலம்பெயர்ந்தோர் வெளியேறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்திலிருந்து சுமார் 40,000 புலம்பெயர்ந்தோர் வெளியேறியுள்ள நிலையில், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 4.3 சதவிகிதம் அதிகம் என்கிறது புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, மக்கள் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு, வேலைதான் முக்கிய காரணமாக உள்ளது.
ஆக, வேலைக்காக வருபவர்கள், வேலைச்சூழல் மோசமானதாக மாறும்போதோ, வேறு ஏதாவது ஒரு நாட்டில் நல்ல வேலை கிடைக்கும்போதோ சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.
அத்துடன், வேறு பல காரணங்களுடன், பணி ஓய்வும் மற்றொரு காரணமாக உள்ளது.
அதாவது, சுவிட்சர்லாந்தில் வேலை செய்பவர்கள் பணி ஓய்வு பெறும்போது, தங்கள் நாடுகளில் கிடைக்கும் சுவிஸ் ஓய்வூதியத் தொகை, சுவிட்சர்லாந்தில் இருக்கும்போது கிடைக்கும் தொகையை விட சற்று அதிகமாக உள்ளதால் அதன் காரணமாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பத் துவங்கியுள்ளனர் பலர்.
இதற்கிடையில், ஒரு பக்கம் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வர, சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையோ குறையத் துவங்கியுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 74,112. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2.9 சதவிகிதம் குறைவு ஆகும்.
விடயம் என்னவென்றால், பல நாடுகள் புலம்பெயர்ந்தோரை தொல்லையாக கருதத் துவங்கியுள்ள நிலையில், பேபி பூமர்கள் என அழைக்கப்படும் 1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்தவர்கள் மொத்தமாக பணி ஓய்வுபெறும்போது, அதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பை பல நாடுகள் விரைவில் உணரப்போகின்றன என்பதில் மட்டும் சந்தேகமில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |