உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 17 நாட்களுக்கு பிறகு 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு: Video
உத்தரகண்ட் மாநிலம் சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சுரங்கப்பாதையில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள்
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சிலக்யாரா, தண்டல்கான் பகுதிக்கு இடையே உள்ள சுரங்கப்பாதை நவம்பர் 12ம் திகதி திடீரென மண் சரிந்து இடிந்து விழுந்தது.
இதில் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவரை பத்திரமாக மீட்கும் பணி கிட்டத்தட்ட 17 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Some of the heroes who successfully rescued 41 of the labourers from the #Uttarkashi tunnel.
— Baba Banaras™ (@RealBababanaras) November 28, 2023
Salute 🫡 to these brave men.#UttarakhandTunnelRescue pic.twitter.com/ajsS6xSqWz
மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினர் குழாய் அமைத்து தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்களின் மன உறுதிக்கு ஒட்டுமொத்த தேசமும் தலைவணங்குகிறது, 17 நாட்களாக தொழிலாளர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் மனித சகிப்புத் தன்மைக்கு சிறந்த சான்றுகள், அதே சமயம் நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்டு மீட்பு குழுவினருக்கு வாழ்த்துக்கள் என இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
Where there is a Will, There is a Way.
— Virender Sehwag (@virendersehwag) November 28, 2023
So thankful that all the 41 workers have been safely rescued.
Gratitude to NDRF , SDRF, Army and all those involved in this incredible rescue mission. Jai Hind #UttarakhandTunnelRescue pic.twitter.com/CpJNioRUCy
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டது மிகவும் உணர்ச்சிகரமானது, தொழிலாளர்களின் குடும்பங்கள் காட்டிய பொறுமைக்கும் தைரியத்திற்கும் பாராட்டுகள். மேலும் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க அயராது உழைத்த மீட்பு குழுவினரை வாழ்த்துகிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |