வாரத்திற்கு 8 பேர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்! கொரோனா காலத்திலும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் புதிதாக இணைந்த 412 பேர்
உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 412 பேர் புதிததாக இணைந்துள்ளனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக உலகமே பெருமளவில் முடங்கின. ஏனெனில் இந்த வைரஸ் எளிதில் பரவும் என்பதால், மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு கல்விநிலையங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து என அனைத்து வகையான பொது பயன்பாடுகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டன.
பொதுமுடக்கம் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தனர்.
வேலையிழப்பு, உணவுத் தட்டுப்பாடு என மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். ஆனால், ஒரு புறம் உலககோடீஸ்வரர்கள் தங்கள் மதிப்புகளை உயர்த்திய படியே இருந்தனர்.
இந்நிலையில் ஹூரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021 வெளியிட்ட அறிக்கையில் கொரோனா காலக்கட்டத்தில், உலக அளவில் புதிதாக 412 பேர் பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தன்படி சராசரியாக வாரத்திற்கு 8 பேர் கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.