அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் 42 பிரித்தானிய பள்ளி மாணவர்கள்., ஓட்டலின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட சிக்கல்
42 பிரித்தானிய பள்ளி மாணவர்கள் அமெரிக்காவிற்கு சென்றிருந்த நிலையில் அவர்களது கடவுசீட்டுகள் தவறுதலாக துண்டுதுண்டாக வெட்டப்பட்டதால், அவர்கள் அங்கேயே சிக்கித் தவிக்கின்றனர்.
பள்ளி குழந்தைகள் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் 41 மாணவர்களின் பாஸ்போட்டுகளை தெரியாமல் துண்டாக்கியதால், அவர்கள் மாணவர்கள் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
பனிச்சறுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய மாணவர்கள்
இங்கிலாந்தின் வால்சலில் உள்ள பார் பெக்கன் பள்ளியைச் சேர்ந்த பதின்ம வயது மாணவர்கள், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்திற்கு பனிச்சறுக்கு பயணத்தில் ஈடுபட சென்றிருந்தனர். அப்போது, அவர்களது பாஸ்போர்ட்டுகள் ஹோட்டல் நிர்வாகத்தால் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Reuters Representative Image
பிப்ரவரி 17-ஆம் திகதி சென்ற மாணவர்கள் பயணம் முடிந்து சனிக்கிழமையன்று (பிப்ரவரி 25) வீட்டிற்குத் திரும்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தவறுதலாக கடவுச்சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டதன் காரணமாக எதிர்பாராதவிதமாக தங்கள் பயணம் தடைபட்டது.
புதன்கிழமை திரும்புவார்கள்
இதையடுத்து, திடீர் சுற்றுப்பயணமாக மாணவர்கள் தற்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரித்தானிய தூதரகம் அவர்களின் ஆவணங்களை சரிசெய்துவருகிறது.
இந்நிலையில், பள்ளித் தலைவர் கேட்டி ஹிப்ஸ், பிரித்தானிய தூதரகம் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துவிட்டதாகவும், மாணவர்கள் புதன்கிழமை திரும்புவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், "இந்த சவாலான சூழ்நிலையை நிர்வகித்ததற்காக" பள்ளி ஊழியர்களைப் பற்றி பெருமைப்படுவதாக அவர் கூறினார்.
'Hotel/WMUR