லண்டன் குடியிருப்பு பகுதியில் சடலமாக கிடந்த பிள்ளைகள்! சிக்கிய பெண்மணி
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டதாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகள் கொலை
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள டாகென்ஹாம் நகரில் இரண்டு மற்றும் ஐந்து வயது பிள்ளைகள் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குடியிருப்பு ஒன்றில் இருந்து இறந்து கிடந்த பிள்ளைகளின் சடலங்களை கைப்பற்றினர்.
குறித்த இரண்டு பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
44 வயது பெண் கைது
இது தொடர்பாக காரா அலெக்ஸ்சாண்டர் (44) என்ற கைது செய்யப்பட்டு Barkingside நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். விசாரணை காவலில் வைக்கப்பட்ட அப்பெண்ணிடம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நடந்த விசாரணையில் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார். பத்து வயதிற்கும் குறைவான இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.