444 நாட்கள் மற்றும் 400 நாட்கள் கொண்ட SBI FD.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எதில் அதிக லாபம் கிடைக்கும்?
444 நாட்கள் மற்றும் 400 நாட்கள் கொண்ட SBI FD திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வுத்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
444 நாட்கள் FD
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம் (SBI Amrit Vrishti scheme) என்பது நிலையான வைப்புத் திட்டமாகும் (FD). இதில் நீங்கள் 444 நாட்களுக்கு மொத்த தொகையை டெபாசிட் செய்யலாம்.
முக்கியமாக இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரை மட்டுமே கிடைக்கும். இந்த FD திட்டத்தின் கீழ், பொது குடிமக்கள் ஆண்டுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள்.
மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள்.
இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், பொதுக் குடிமக்கள் முதிர்வுத் தொகையாக ரூ. 2,18,267.08 பெறலாம். அதேபோல, மூத்த குடிமக்கள் தோராயமாக ரூ.2,19,574.08 பெறலாம்.
400 நாட்கள் FD
எஸ்பிஐயின் அம்ரித் கலாஷ் எஃப்டியில் (SBI Amrit Kalash) முதலீடு செய்வதற்கான கடைசித் திகதி மார்ச் 31, 2025 ஆகும். நீங்கள் கூடிய விரைவில் அதில் முதலீடு செய்ய வேண்டும். இந்த FDயின் காலம் 400 நாட்கள் ஆகும்.
இதில் பொது குடிமக்கள் 7.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டியும் பெறுவார்கள்.
400 நாட்கள் கொண்ட எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் பொது குடிமக்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வுத் தொகை ரூ.2,16,035.58 ஆக இருக்கும்.
அதேபோல், இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வுத் தொகை ரூ.2,17,201.11 ஆக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |