ரூ.11,399க்கு வாங்கிய Royal Enfield Bullet! இப்போது புது பொலிவில்
45 வருடங்கள் பழமையான தனது தந்தையின் Royal Enfield Bullet பைக்கை Re-store செய்து புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு அவரது மகன் மாற்றியுள்ளார்.
பொதுவாக Royal Enfield பைக்கை உபயோகப்படுத்தும் உரிமையாளர்கள் பைக்குடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், நாம் இங்கு பார்க்க போவது என்னவென்றால் கேரளாவில் 45 வருடங்கள் பழமையான தனது தந்தையின் பைக்கை தூசு தட்டி பழுது பார்த்து அவரது மகன் ஓட வைத்துள்ளார்.
எங்கு நடந்தது?
கேரள மாநிலத்தில் 45 வருடங்கள் பழமையான தனது Royal Enfield பைக்கை ஒருவர் ஓரம்கட்டி வைத்துள்ளார். அவருக்கு திருமணமாகி, அவரது மகன்கள் வளர்ந்துள்ளனர். இந்நிலையில், அவரது மகன் ஒருவர் அந்த பைக்கை Re-store செய்து புதிய தோற்றத்திற்கு மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 1979 -ம் ஆண்டு என்.எஸ்.ஜோஷி என்பவர் Royal Enfield Bullet 350 பைக்கை ரூ.11,399க்கு வாங்கியுள்ளார். அப்போது அவரது ஏரியாவில் இவர் தான் முதல் நபராக இந்த பைக்கை வாங்கியுள்ளார்.
கடந்த 2006 -ம் ஆண்டு ஜோஷி இறந்திருந்தாலும், புல்லட்டின் ரசீதை அவரது குடும்பத்தினர் பத்திரமாக வைத்துள்ளனர். 1999 -ம் ஆண்டு வரை இந்த பைக்கை ஜோஷி பயன்படுத்தியுள்ளார்.
பின்பு, 1990ஆம் ஆண்டில் சர்வீஸ் செய்ததையடைத்து 1996 -ம் ஆண்டு வரை பயன்படுத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பிறகு இந்த பைக்கை பராமரிக்க ஆள் இல்லாததால் ஓரம் கட்டியுள்ளனர்.
பழமையான பைக் என்பதால் அதனை வாங்குவதற்கு பலரும் முன்வந்துள்ளனர். ஆனால், இந்த பைக்கை அவரது மகன் புதுப்பிக்க நினைத்ததால் விற்கவில்லை.
இந்நிலையில், ஜோஷியின் மகன் கிட்டத்தட்ட சுமார் 26 வருடங்களுக்கு பிறகு ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கை Restore செய்து புதிய தோற்றத்திற்கு மாற்றி சாலைக்கு கொண்டு வந்துள்ளார்.