தென் கொரியாவில் சர்வதேச சாரணர் சந்திப்பு கூட்டம்: 4,500 பிரித்தானிய சாரணர்கள் சியோலுக்கு மாற்றம்
தென் கொரியாவில் நடைபெற்று வரும் சர்வதேச சாரணர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரித்தானிய குழுவினர்கள் முகாமில் இருந்து தலைநகர் சியோலில் உள்ள ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
600 சாரணர்களுக்கு மேல் பாதிப்பு
தென் கொரியாவில் உலக சாரணர் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. 14 வயது முதல் 18 வயதுடைய சுமார் 43,000 சாரணர்கள் இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இளையோர் சந்திப்பு கூட்டம் இதுவாகும்.
CHARLOTTE SWAFFER
இந்நிலையில் வெப்ப அலை எச்சரிக்கைக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச சாரணர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 600 டீன் ஏஜ் இளைஞர்கள் வெப்பம் சார்ந்த உடல்நல குறைவுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல சாரண மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் கொரிய அரசாங்கம் டஜன் கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அப்பகுதிக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்துள்ளது.
Reuters: Yonhap
ஹோட்டலுக்கு மாற்றப்பட்ட பிரித்தானிய சாரணர்கள்
திறந்த வெளியில் அமைக்கப்பட்ட முகாம்களில் இந்த சர்வதேச சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருவதால் பல சாரணர்கள் உடல்நலக் குறைவுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் குழுக்கள் தங்களுடைய உறுப்பினர்களை சந்திப்பு கூட்டத்தில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.
EPA
இந்த சர்வதேச சாரணர் சந்திப்பு கூட்டத்தில் 4,500 பிரித்தானியாவை சேர்ந்த சாரணர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் Saemangeum பகுதி முகாம் தளத்தில் இருந்து தலைநகர் சியோலில் உள்ள ஹோட்டலுக்கு நகர்த்தப்பட்டு இருப்பதாக சாரணர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Scout camp,