46 அகதிகளின் சடலங்கள்! அமெரிக்காவில் சிக்கிய லொறி.. பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் 100 அகதிகளை ஏற்றி வந்த கனரக லொறி பிடிப்பட்டபோது, 46 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மெக்சிகோ எல்லையில் இருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சான் அன்டோனியோவில் ஏராளமான அகதிகள் தப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கனரக லொறி ஒன்றில் ஏறி அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். சான் அன்டோனியோவின் தெற்கு புறநகரில், ரயில் பாதைகளுக்கு அடுத்த இடத்தில் குறித்த கனரக லொறியை பொலிசார் மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது லொறியில் இருந்து 46 அகதிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் உயிருக்கு போராடிய 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் சிறுவர்கள் ஆவர்.
Photo: KSAT 12 (Twitter)
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அகதிகள் தப்பிச் செல்லும் முயற்சியில் இந்த துயரம் நேர்ந்திருக்கலாம் என தீயணைப்புத் துறை தலைவர் தெரிவித்தார். நேற்றைய தினம் வெப்பநிலை அதிக 39.4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால் அவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கொடிய திறந்த எல்லைக் கொள்கைகளின் விளைவு தான் இதற்கு காரணம் என்றும், அவர் சட்டத்தை அமுல்படுத்த மறுத்ததால் தான் இது நிகழ்ந்ததாகவும் டெக்சாஸ் நகர ஆளுநர் கிரேக் அப்போட் குற்றம்சாட்டியுள்ளார்.
At Least 42 People Found Dead Inside Truck Carrying Migrants In Texas.
— Greg Abbott (@GregAbbott_TX) June 28, 2022
These deaths are on Biden.
They are a result of his deadly open border policies.
They show the deadly consequences of his refusal to enforce the law. https://t.co/8KG3iAwlEk