நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் 48 TB அளவிற்கு சிக்கிய ஆபாச படங்கள்! மீண்டும் விசாரணைக்கு அழைக்க முடிவு
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஆபாச பட தயாரிப்பு வழக்கில், பொலிஸார் மீண்டும் ஷில்பாவை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குந்த்ரா ஆபாச படங்களைத் தயாரித்து, வெளியிட்டு அதில் தினமும் லட்சக்கணக்கில் பணம் சம்பாத்தித்து வந்தது சமீபத்தில் கன்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை ராஜ் குந்த்ராவை பொலிசார் அதிரடியாக கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொலிசார் அனுமதி வாங்கினர்.
மும்பை பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணைக்கான கால அவகாசம் வரும் ஜுலே 27-ஆம் திகதி நீட்டிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணையின்போது நடிகை ஷில்பா ஷெட்டியம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது , தனது கணவர் ஆபாசப்படம் தயாரிக்கவில்லை எனறும், அவர் OTT தளங்களில் வெளியிடக்கூடிய erotica எனும் பாலியல் ஆசைகளைத் தூண்டும் குறும்படங்களைத் தான் தயாரித்துள்ளார் என்று கூறினார்.
தற்போது விசாரணை அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் நிலையில், பொலிஸார் ஷில்பா ஷெட்டியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 48 TeraBytes அளவிற்கு முழுவதுமாக ஆபாச பட விடியோக்கள் சிக்கின.
இந்நிலையில், ஷில்பா ஷெட்டி மீண்டும் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார். மேலும், பொலிஸார் ஷில்பாவின் செல்போனை குளோனிங் செய்து, அதிலிருந்து சில தகவல்களை சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.