4-வது டி20: மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்தியா!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
முதலில் துடுப்பாட தேர்வு செய்த இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்தது, ரிஷப் பண்ட (31 பந்துகளில் 44 ஓட்டங்கள்) அதிகபட்ச ஓட்டங்களை குவித்தார்.
ரோஹித் ஷர்மா (33), சஞ்சு சாம்சன் (30) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்கினர். ஓபேட் மெக்காய் (2/66), அல்ஜாரி ஜோசப் (2/29) தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அடுத்ததாக களமிறங்கிய துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவரில் 132 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் (3/12), அவேஷ் கான் (2/17), அக்சர் படேல் (2/48), ரவி பிஷ்னோய் (2/27) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.