4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றம்!
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.தொடரை வெல்ல இந்தியா கட்டாயம் போராடும் என்பதால் ஆட்டத்தில் சுவாரஸ்யமிருக்குமென ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
3 வது டெஸ்டில் படு தோல்வி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே இன்டோரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இரண்டரை நாட்களிலேயே போட்டி முடிந்து இந்தியா படு தோல்வி அடைந்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இந்திய மைதானங்கள் இருந்தும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.
@gettyimages
தொடக்க ஆட்ட காரர்களாக கே.எல் ராகுலுக்குப் பதில் மாற்றாக ஆடிய சுப்மன் கில்லும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே இந்திய அணியின் தொடக்க ஆட்ட காரர்களில் இசான் கிஷான் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இரட்டை சதம் அடிப்பது வீண்
அகமதாபாத்தில் வியாழக்கிழமை தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, கவனம், இந்திய பேட்டிங் ஆர்டர் மற்றும் நிச்சயமாக ஆடுகளத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
புஜாரா, முந்தைய டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டத்தின் கடுமையான சூழலிலும் 59 ரன்கள் எடுத்தார்.
எனவே அவர் அணியில் கண்டிப்பாக இடம் பெறுவார் என தெரிய வந்துள்ளது.
@gettyimages
ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய வீரர்கள் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் இரண்டு டெஸ்டின் போது பந்து வீச்சில் செய்த தவறுகளை அடுத்த போட்டியில் செய்யாமல் இந்திய வெற்றிகளுக்கு வழிவகுத்தனர்.
ஆனால் மூன்றாவது டெஸ்டில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததால் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தொடரில் இதுவரை ஒரு சதம் மற்றும் ஏழு அரை சதங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என டிராவிட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பேட்ஸ்மேன்கள் இரட்டை சதம் அடிப்பது பற்றி யோசிக்காமல் சிறப்பாகப் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடினாலே போதுமானதென டிராவிட் கூறியுள்ளார்.