பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு! சுட்டுக் கொல்லப்பட்டதாக வந்த தகவல்: குவிந்த ஆயுதந்திய பொலிசார்
பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் Hartcliffe-ல் இருக்கும் Hareclive சாலை பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணிக்கு வந்த ஆயுதமேந்தியே பொலிசார், அங்கிருந்த ஐந்து பேரை முதலில் கைது செய்தனர்.
அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும், 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருப்பதாக கருதப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 5.20 மணியளவில் Bristol-ன் Hareclive சாலை பகுதிக்கு சிறப்பு துப்பாக்கி அதிகாரிகள் அழைக்கப்படனர்.
இங்கு ஒரு ஆண் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பின்னர் பல நபர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வந்தது. உடனடியாக காயமடைந்து கிடந்த இரண்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறினர். மேலும் இதில் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்து பொலிசார் தெரிவிக்காததால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.