இரத்த சர்க்கரை அளவை சட்டுன்னு குறைக்கு இந்த 5 மூலிகைகள் போதும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த 5 மூலிகைகள் போதும். அவைகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
அமிர்தவல்லி இலை
அமிர்தவல்லி இலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த இலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன் ஊற வைத்து பின் காலை எழுந்ததும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
நித்திய கல்யாணி
நித்திய கல்யாணி பூ மலேரியா, தொண்டைப் புண், நீரிழிவு நோய் போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
இரத்ததில் சர்க்கரை அளவை சமநிலை செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு கப் தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துள்ள இலையை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வேங்கை மரம்
வேங்கை இலையை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
அதுமட்டுமன்றி அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் அடிக்கடி பசி எடுப்பதையும் கட்டுப்படுத்தலாம்.
இந்த மூலிகையில் ஆண்டி ஹைப்பர் லிப்டெமிக் பண்புகள் இருக்கின்றன. இது கொழுப்பை கரைக்கவும் உதவும்.
நாவல் பழம்
நாவல் பழம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
நாவல் விதை பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பல நன்மை கிடைக்கும்.
மேலும், இது சிறுநீரகம் செயலிழப்பையும் தவிர்க்க உதவுகிறது.
சிறுகுறிஞ்சான்
இது ஒவ்வமை, இறுமல், சளி, மலச்சிக்கல் போன்ற பல உடல் நல பாதிப்புகளுக்கு உதவுகிறது.
இந்த தாவரத்தில் ஃபிலவனோல்ஸ் இருப்பதுதான் முக்கிய காரணியாக உள்ளது. எனவே இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
சாப்பிடுவதற்கு முன் ஒரு ஸ்பூன் சிறுகுறிஞ்சான் பொடியை ஒரு கிளாஸ் தண்ணீர் கலந்து குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |