இரும்புசத்து நிறைந்த முருங்கை சூப் குடிப்பதால் ஏற்படும் 5 நன்மைகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது.
இதனால் இரத்த சோகை நோய் வருகிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மருத்துவர்களே முருங்கையை பரிந்துரைக்கின்றனர்.
இதற்கு மட்டும் இல்லாமல் முருங்கை சூப் குடிப்பதால் இன்னும் பல நன்மைகள் நம் உடலுக்கு வந்தடைகின்றன. என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்கும் முருங்கை சூப்பை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இதனால் சுலபமாக உடல் எடையை குறையும்.
மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும் முருங்கைக்காய் சூப்பில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை முழுவதுமாக குணமாக்கப்படுகிறது.
எலும்புகளுக்கு சிறந்தது முருங்கைக்காய் சூப்பில் உள்ள கால்சியம் எலும்புகளை ஆரோக்கியமாகவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது முருங்கை சூப்பில் காணப்படும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் முருங்கை சூப்பில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் பருவகால நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |