தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் முக்கிய 5 நன்மைகள்.., என்னென்ன தெரியுமா?
உடல், மனம், ஆன்மீகம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கால கலை யோகா ஆகும்.
இது மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை ஒருங்கிணைக்கிறது.
தினசரி பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
இந்நிலையில், 12ஆவது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் முக்கிய 5 நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
மன அழுத்தம் குறையும்- யோகா செய்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. சுவாசப் பயிற்சி மற்றும் தியானம் மனதை அமைதிப்படுத்தும்.
உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்- தொடர்ந்து யோகா செய்தால் தசைகள் வலுப்பெற்று, உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலை மேம்படும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்- யோகா இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் அபாயமும் குறைகிறது.
உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்- யோகா உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. மன அழுத்தத்தால் அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்துகிறது.
நிம்மதியான தூக்கம் கிடைக்கும்- யோகா நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. இதனால் ஆழமான மற்றும் நல்ல தூக்கம் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |