வழுக்கையிலும் முடி வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்
முடி வளர்ப்பது என்பது தற்போது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், வழுக்கையிலும் முடி வளர இந்த 5 எண்ணெய்களை பயன்படுத்துங்கள்.
1. பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் பி, கே, ஈ போன்றவை அதிகமாக உள்ளன.
இவை ஆண்களின் தலைமுடி உதிர்தலுக்கு காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
இந்த எண்ணெயை ஆண்கள் தினமும் தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
2. ஜபோரண்டி எண்ணெய்
ஜபோரண்டி எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மேலும், உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது, நரைமுடியைத் தடுக்கிறது, முடி வெடிப்பு மற்றும் பொடுகைத் தடுக்கிறது.
இந்த எண்ணெயை எப்போதும் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
3. பிரிங்கராஜ் எண்ணெய்
பிரிங்கராஜ் எண்ணெய் பித்தத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
இந்த எண்ணெய் உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
மேலும் மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை வழங்குவதால் தலை முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி வலுவாக இருக்கும்.
4. நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காய் எண்ணெய் வழுக்கைத் தலையில் முடி வளர்ச்சியை தூண்டவும், மயிர்கால்களை வலுவாக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, மியிர்கால்களை பலப்படுத்தும்.
நெல்லிக்காயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உச்சந்தலை செல் சேதத்தை சரிசெய்து, ஆரோக்கியமான முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
5. முருங்கை எண்ணெய்
முருங்கை எண்ணெயில் உள்ள அதிகமான இரும்புச்சத்து மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜனை அதிகம் பெற வழிவகை செய்கிறது.
மேலும் இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது.
இந்த எண்ணெயை தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், உச்சந்தலையில்நல்ல முடி வளர்ச்சியைக் தூண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |