பெண்களுக்கான சிறந்த 5 இலகுவான, குறைந்த செலவிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பெண்கள், இலகுரக மற்றும் குறைந்த பராமரிப்பு தேவையுள்ள ஸ்கூட்டர்களையே விரும்புகிறார்கள்.
இங்கு பெண்களுக்கு ஏற்ற சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பார்ப்போம்:
- Zelio Scooter – எடை மிகக் குறைவானது (80 கிலோ). ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. ஒரு சார்ஜில் 60 முதல் 90 கிமீ வரை பயணிக்க முடியும். அதிகபட்ச வேகம்: மணிக்கு 25 கிமீ. விலை: ரூ.49,500.
- Ola Scooter (S1 X+) – 110 கிலோ எடை கொண்டது. 1.5 Kwh இரட்டை பேட்டரிகள் மூலம் 75-146 கிமீ வரை செல்லும். வேகம்: மணிக்கு 70 கிமீ. விலை: ரூ.59,999.
- TVS iQube (Base Model) – 2.2 Kwh பேட்டரி, 75 கிமீ வரை ரேஞ்ச். வேகம் மணிக்கு 75 கிமீ. பேட்டரி சார்ஜ் ஆக 3 மணி நேரம் தேவை. விலை: ரூ.94,434.
- Bajaj Chetak EV – 2.88 Kwh பேட்டரி. 123 கிமீ வரை செல்லும். 4 மணி நேரத்தில் சார்ஜ் ஆகும். வேகம் மணிக்கு 63 கிமீ. விலை: ரூ.1.02 லட்சம்.
- Ather 450S – 2.9 Kwh பேட்டரி, 126 கிமீ வரை செல்லும். வேகம் மணிக்கு 90 கிமீ. சார்ஜ் ஆக 3 மணி நேரம். விலை: ரூ.1.49 லட்சம்.
இந்த ஸ்கூட்டர்கள் அனைத்தும் பெண்களுக்கு ஏற்றபடி டிசைன் செய்யப்பட்டுள்ளது. காம்பாக்டான, எளிதில் இயக்கக்கூடிய, நல்ல ரேஞ்சு மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் கொண்டவை. உங்கள் தேவைக்கேற்ப சிறந்த தேர்வை செய்யுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
best electric scooters for women India, budget electric scooters 2025, lightweight EV scooters for ladies, top electric scooters under 1.5 lakh, affordable electric scooters for daily use, women-friendly electric vehicles, electric scooters without license India, low-weight electric scooter for girls