தீபாவளி பண்டிகை நேரத்தில் இந்த 5 தொழிலை தொடங்கினால் போதும்: அதிக லாபம் பெறலாம்
வியாபாரம் என்று வரும் நேரத்தில் பண்டிகைக் காலங்களில் அதிக விற்பனை நடைபெறும். அப்படிப்பட்ட 5 சிறு தொழில்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.
பரிசு பொருட்கள் கடை
பண்டிகைக் காலம் என்றாலே வாழ்த்துக்களை பரிமாறும் பொழுது நமக்கு பிடித்தவர்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ பரிசு பொருள்களை வாங்கி கொடுப்பது வழக்கமான ஒன்று.
இதில் கவர்ச்சியான பொருள்களை கடைகளில் பார்ப்பதன் மூலம் பரிசுகளை கொடுப்பதும் முக்கியமான ஒன்றாகும். இதனால், கண்களுக்கு மிகவும் அழகான கவர்ச்சியான பொருள்களை வைத்து கடை ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் வருமானம் பெற முடியும்.
பலகாரம் உபகரணம் கடை
தீபாவளி என்றாலே வீடுகளில் பலகாரம் செய்யாமல் இருப்பதில்லை. அப்படிப்பட்ட பலகாரங்களை செய்யும் அச்சுகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை வீட்டில் உள்ளவர்களுக்கு தேவைப்படும்.
மேலும், மண் பானை, தோசைக்கல், காய்கறி நறுக்கும் இயந்திரம் வாங்க வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள். இதனால், இந்த பொருள்களை வைத்து சாலையோர கடைகளை வைப்பதன் மூலம் பண்டிகை காலங்களில் நல்ல வருவாயை பெறலாம்.
சாமி சிலைகள்
தீபாவளி நேரங்களில் சில பேருக்கு புதிய சாமி சிலைகளை வைத்து வழிபடுவது பழக்கமாக கொண்டிருப்பார்கள். குறிப்பாக லட்சுமி சிலை, விநாயகர் சிலை, காளி சிலை, குபேரர் சிலை ஆகியவற்றை சிறிய அளவில் செய்து விற்பனை செய்யலாம்.
பட்டாசு கடைகள்
தீபாவளி என்றாலே பட்டாசு, பட்டாசு என்றாலே தீபாவளி தான். இதனால், குழந்தைகள் பயன்படுத்தும் மத்தாப்புகள் மற்றும் ஒலி குறைந்த பட்டாசுகளை விற்பனை செய்வதன் மூலமும் சம்பாதிக்கலாம்.
விளக்குகள்
தீபாவளி சமயங்களில் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவது தான் இந்த நாளினுடைய சிறப்பான ஒன்றாகும். அதனால், சிறிய விளக்குகள், எண்ணெய், திரி போன்றவற்றை விற்பனை செய்தால் தேவையான லாபத்தை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |