பெண்களை மட்டுமே தாக்கும் 5 வகை புற்றுநோய்கள்- கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
பெண்களை மட்டுமே தாக்கும் 5 புற்றுநோய்கள் குறித்தும் அதனை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி தடுப்பது என்றும் விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு வருடமும் தோராயமாக இரண்டு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
மார்பக புற்றுநோய்
இந்திய பெண்களிடத்தில் மார்பக புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.
அடிக்கடி மருத்துவ பரிசோதனை மற்றும் சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இந்நோயை அரம்ப நிலையைலேயே தடுக்க முடியும்.
40 வயதிற்கு மேலுள்ள பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை எடுத்துக் கொள்வது நல்லது.
கருப்பை வாய் புற்றுநோய்
HPV வைரசால் வரும் கருப்பை வாய் புற்றுநோயும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
இந்த வகை புற்றுநோய் வராமல் இருக்க HPV-க்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
Pap smears பரிசோதனை மூலம் இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
சினைப்பை புற்றுநோய்
இந்நோயின் ஆபத்து என்னவென்றால் மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டறிய முடியும்.
இதற்கு முன் குடும்பத்தில் யாருக்காவது சினைப்பை புற்றுநோய் இருந்தால் மரபணு ஆலோசனை செய்து கொள்வது நல்லது.
இந்நோய்க்கு கீமோதெரபியோடு சேர்ந்து அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி.
கருப்பை புற்றுநோய்
பெண்களுக்கு வரக்கூடிய கருப்பை புற்றுநோயினால் அசாதாரணமாக ரத்தப்போக்கு இருக்கும்.
எண்டோமெட்ரியம் பயோப்ஸி பரிசோதனை மூலம் இந்நோயினை கண்டறிய முடியும்.
இதை குணப்படுத்த அறுவை சிகிச்சை, ரேடியேஷன் அல்லது ஹார்மோன் தெரபியை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் பெண்களிடன் அதிகரித்து வரும் புகைப்பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு.
சிடி ஸ்கேன் மூலம் இந்நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இதற்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
எப்படி தடுப்பது?
- ஆரோக்கியமான வாழ்க்கைமுறை.
- காய்கறிகள், பழங்கள் சேர்க்கப்பட்ட சரிவிகித டயட்.
- புகையிலை பொருட்களை தவிர்ப்பது.
- சீரான உடற்பயிற்சி.
- உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது.
- முறையான பரிசோதனைகளை 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் எளிதாக குணப்படுத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |