வைட்டமின் சி குறைபாடு இருப்பதை எச்சரிக்கும் 5 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
உடல் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின்கள் அவசியம். அவற்றில் முக்கியமானது வைட்டமின் சி.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சவும் உதவுகிறது.
இந்த வைட்டமினை உடலால் தானாக உருவாக்க முடியாது. எனவே உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்கள் மூலம் பெற வேண்டும்.

நெல்லிக்காய், கொய்யாப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பல இயற்கை உணவுகளில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
அந்தவகையில், வைட்டமின் சி குறைபாடு இருப்பதை எச்சரிக்கும் 5 அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
1. அடிக்கடி சளி, இருமல்
வைட்டமின் சி குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். இதனால் சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்கள் அடிக்கடி ஏற்படும்.
2. ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு
பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வருதல் அல்லது வீக்கம் இருந்தால், அது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.

3. உடல் சோர்வு
போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாக இருந்தால், அது வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் இரும்புச்சத்து உறிஞ்சும் திறன் குறைவின் காரணமாக இருக்கும்.
4. சருமம் வறட்சி
வைட்டமின் சி குறைந்தால் சருமம் வறண்டு, சுருக்கங்கள் தோன்றலாம். காயங்கள் ஆறவும் அதிக நேரம் ஆகும்.
5. மூட்டு வலி
கொலாஜன் உற்பத்தி குறைவதால் மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |