உலகில் ஒரு ரூபாய் கூட வருமான வரியே இல்லாத 5 நாடுகள்: எது தெரியுமா?
உலகின் இந்த 5 நாடுகளில் வருமான வரியே கிடையாது. அது எந்தெந்த நாடுகள் என்று தெரிந்துகொள்ளலாம்.
1. மொனாக்கோ
பணக்காரர்களின் சொர்க்க பூமியாக விளங்கும் மொனாக்கோவில் தனிப்பட்ட வருமான வரி கிடையாது.
இந்த நாடு ஆடம்பரமான வாழ்க்கைக்கும், மத்திய தரைக்கடல் கடற்கரைக்கும் பெயர் பெற்றது.
2. பஹாமாஸ் தீவு
பஹாமாஸ் தீவில் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை உள்ளது.
அது மட்டுமின்றி, இங்கு வருமான வரி கிடையாது. இது வெளிநாட்டினருக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது.
3. துபாய்
துபாய் மற்றும் அபுதாபியில், தனிப்பட்ட வருமான வரி விதிக்கப்படுவதில்லை.
அத்துடன் நவீன வாழ்க்கை முறையை UAE வழங்குகிறது. இது சர்வதேச வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகும்.
4. பெர்முடா
பெர்முடா தனிப்பட்ட வருமான வரி இல்லாத அழகான தீவு.
நிதி நன்மைகளுடன் அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவோருக்கு இது ஏற்ற இடமாகும்.
5. கேமன் தீவு
நிதிச் சேவைத் துறைக்கு பெயர் பெற்ற கேமன் தீவுகளில் தனிநபர் வருமான வரி கிடையாது.
இங்கு தனிநபர் வருமானம், வணிகங்களை ஈர்க்கும் வருமானம், சொத்து வரி ஆகியவை விதிக்கப்படுவதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |